கொம்பனித்தெரு மியூஸ் வீதியில் உடைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம் தேடும் முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகார சபை ஈடுபட்டிருப்பதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் இன்று கூறினார்.
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலிற்கிணங்க நகர அபிவிருத்தி அதிகார சபையால் கடந்த மே மாதம் 5ஆம் திகதி கொம்பெனித் தெரு பகுதியில் வீடுகள் உடைக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்த முறைப்பாட்டில், நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் பிரசன்ன டி சில்வா, காணிகள் பணிப்பாளர் அபய குணவர்தன காணிகள் உதவி பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
17 பேர் கூட்டாக இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளனர். ஜே.சி.வெலியமுன முறைப்பாட்டளர் சார்பிலும், பிரதி சொலிஸிட்ட ஜெனரல் சவீந்திர பெர்னாண்டே பிரதிவாதிகள் சார்பிலும் ஆஜராகினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’