வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 ஜூலை, 2010

கச்சதீவு கடலில் கடற்படையினர் தாக்குதல் தமிழக மீனவர்கள் ஐம்பது பேர் காயம் சனிக்கிழமை இரவு சம்பவம்

கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 50 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் காயமடைந்துள்ளனர்
. ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 130 படகுகளில் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் இரவு 8 படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கியும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் மீனவர்கள் வைத்திருந்த பற்றறிகளையும், ஜி.எஸ்.பி. கருவிகளையும் கைப்பற்றிச் சென்றுவிட்டதாக மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலில் காயமடைந்தவர்களில் எத்தனை பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் எதுவும்தெரிவிக்கவில்லையென்று பி.ரி.ஐ.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மீனவர் சங்கத் தலைவர் பி.ஜே.சு.கூறுகையில்; கடற்படையினர் தாக்குதலில் ஒவ்வொரு படகு உரிமையாளருக்கும் சுமார் 20,000 ரூபா முதல் 30,000 ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் கூறினார்.
கடந்த 7 ஆம் திகதி நாகையைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குக் கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கை கடற்படையினரால் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்திய அயலுறவு அமைச்சகம் இலங்கை அரசுடன் பேசி இப்பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு பதில் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’