வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 ஜூலை, 2010

பெருந்தொகை சுனாமி நிவாரண நிதியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வீணடித்துவிட்டன

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியாக பெற்றுக் கொண்ட பெரும் தொகைப் பணத்தை வீணடித்து விட்டன என்று ஆர்எம்ஐரி என்ற ஆய்வு நிலையம் மற்றும் மெல்போர்ன் மொனாஷ் பல்கலைக்கழகங்கள், இலங்கையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழகம், இந்தியாவிலுள்ள சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்டு ஒஸ்எயிட் எனும் அவுஸ்திரேலிய அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது
.

இலங்கையில் மட்டும் 500 க்கும் அதிகமான தன்னார்வ நிறுவனங்கள் செயல்பட்டன எனற போதிலும் 14 நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமிப் பேரழிவு போன்ற பாரிய அழிவுகளின் போது மீட்புப் பணியை மேற்கொள்ளக் கூடிய அனுபவம் பல நிறுவனங்களுக்கு இருக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிர்மாணிக்கப்பட்ட சில புகலிடங்களில் நான்கு வருடங்கள் வரை குடும்பங்கள் வாழ்ந்து வந்ததால் தற்காலிக வீடுகளை கட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருத்தல் வேண்டும் என்று இந்த 385 பக்க அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பத்திரிகை தெரிவித்துள்ளது.
அரசாங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சுனாமியிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை முழுமையாக கிரகித்து வைத்திருக்காவிட்டால் மீண்டும் அதே தவறை புரிந்து ஏராளமான உலக உதவிப் பணத்தை வீணடித்து விடும் என்று ஆர்எம்ஐரியின் உலகளாவிய ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் மார்ட்டின் முலிகனும் அறிக்கையின் இணை ஆசிரியை யசோ நடராஜாவும் தமதுரையில் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச தன்னõவ நிறுவனங்களின் உதவித் தொகைகள் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் சமுதாயக் குழுக்களுடன் உறுதியாக இணைந்து செயல்பட்டதையும் இவர்கள் சுட்டிக் காட்டியுள்ளõர்கள். ஆனால் பல உதவி நிறுவனங்கள் அவசர அவசரமாகவும் ஒன்றோடொன்று போட்டியாகவும் செயல்பட்டதால் பெரும் தொகையான சுனாமி உதவிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். தரம் குறைந்த நிர்மாணப் பணிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் பல நிறுவனங்கள் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்தன என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’