வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஜூலை, 2010

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்து இருக்கும்-அமைச்சர் கெஹலிய

பாதுகாப்பை பேணும் முகமாக நாட்டின் முக்கிய இடங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்து இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.



முக்கிய பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கு அரசாங்க காணிகள் இல்லாவிட்டால் தனியார் காணிகளை அரசாங்கம் பயன்படுத்தும் எனவும் இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.
உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகள் என பிரகடனப்படுத்தப்பட்டதால் தமது காணிகளுக்கு செல்ல முடியாதிருப்பதாக குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறினார்.
"தென்கொரியாவில் அமெரிக்கா உயர் பாதுகாப்பு வலயமொன்றை பேணுகிறது. அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் அமெரிக்கா அவ் உயர் பாதுகாப்பு வலயத்தை பேணுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
காணி உரிமைகள் நிராகரிக்கப்படுவது மற்றுமொரு யுத்தத்திற்கு வழிவகுக்குமா எனக் கேட்டபோது, "மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து சமமான உரிமைகள் வழங்கப்பட்டால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பமாட்டார்கள்" என அமைச்சர் பதிலளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’