வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஜூலை, 2010

ஆசிரியை கண்டித்ததால் 10 வயது சிறுமி தீக்குளிப்பு!

பத்து வயது சிறுமி தீக்குளித்த சம்பவம் ஒன்று தமிழக நெல்லிக்குப்பம் அருகே உள்ள நத்தப்பட்டு கொலனியில் இடம்பெற்றுள்ளது. அரசு நடுநிலைப் பாடசாலையில் 5ஆம் வகுப்பு படித்து வந்த அபினா எனும் சிறுமியே இவ்வாறு தீக்குளித்துள்ளார்.

மேற்படி கொலனியைச் சேர்ந்த கண்ணன் எனும் கூலி தொழிலாளியின் மகள் அபினா.
5ஆம் வகுப்பில் படிக்கும் இவருக்குப் பாடம் நடத்திய ஆசிரியை ஒருவர், ஊஞ்சல் என்ற வார்த்தையை சொல்லி கொடுத்து பாடம் நடத்தினார். வகுப்பில் இருந்த அனைத்து குழந்தைகளையும், ஊஞ்சல் என்ற வார்த்தையைத் திரும்ப சொல்லுமாறு கூறியுள்ளார்.
அப்போது அபினா ஊஞ்சல் என்ற தமிழ் வார்த்தையை உச்சரிக்க முடியாமல் திணறியதாகவும் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவி அபினாவைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் 5ஆம் வகுப்பிலிருந்து அபினாவை , முதலாம் வகுப்புக்குச் சென்று விடுமாறும் ஆசிரியைக் கூறி அபினாவை வெளியே அனுப்பி விட்டார்.
இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று மதியம் 1.00 மணியளவில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து, உடலில் ஊற்றி தீக்குளித்தாள்.
உடல் கருகிய நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அபினாவை கடலூர் அரசு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி அபினா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நெல்லிக்குப்பம் பொலிசில் புகார் செய்யப்பட்டது. பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபினா படித்த அரசு பாடசாலைக்குச் சென்று விசாரணை நடத்தவும் பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’