விமல் வீரவன்ச தமிழ் மக்களின் முன் முழந்தாளிட்டு, வணங்கி, மன்னிப்புக் கோர வேண்டும். அம்மக்களுடன் இணைந்து அவர்கள் இலங்கையில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யுமாறு கோருவாராயின் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம் என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
விமல் வீரவன்சவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் எமக்கு மேலும் கூறுகையில்,
"விமல் வீரவன்ச அரங்கேற்றும் நாடகத்தின் உட்பொருள்தான் எமக்கு புரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு குறித்து விமல் வீரவன்ச ஏன் பயப்படுகின்றார் என்பது, எமக்கு அவர் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்கின்றது.
அரசாங்கத்துடன் இணைந்து இவர் முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதனால் மக்களது கவனத்தைத் திசை திருப்பும் முகமாகவே இவ்வாறானதொரு நாடகத்தை அவர் அரங்கேற்றுகிறார்.
இது தமிழ் மக்களைக் காப்பாற்றும் எண்ணமல்ல. தன் மீது படிந்துள்ள சேற்றைக் கழுவும் செயற்பாடாகவே நாம் காண்கின்றோம்" எனத் தெரிவித்தார்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’