ஆபாசப் பட நடிகையான எலிஷா சமுடியோ (வயது 25) கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டிருக்கிறார். கொலைசெய்யப்பட்டது மட்டுமல்லாமல் இவரது உடலினை நாய்க்கு வீசியதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
போர்த்துகீஸ் உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முன்னாள் காதலியாக இருந்தவரே இந்த எலிஷா. ஆபாசப் படங்கள் பலவற்றிலும் எலிஷா நடித்திருக்கிறார். ரொனால்டினோவுடனான காதல் முறிவடைந்ததும் பிரேஸிலின் முன்னணி கால்பந்தாட்ட அணிகளில் ஒன்றான பிளமங்கோ அணியின் கோல் காப்பாளர் புறுனோ பெர்ணான்டஸ் டி சொவ்ஷா என்ற வீரரை காதலிக்கத் தொடங்கினார்.
புறுனோ ஏற்கனவே திருமணமானவர். இருந்தபோதிலும் இவர் மூலமாக கர்ப்பமான எலிஷா நான்கு மாதங்களின் முன்பு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு அப்பா, புறுனோ தான் என எலிஷா கூறத் தொடங்கியதும், இவளை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டுமென்ற முடிவுக்கு புறுனோ வந்தான்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக எலிஷாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. எலிஷாவை தேடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் புறுனோ பொலிஸாரிடம் சரணடைந்திருக்கிறார். அவர் கூறிய தகவல்கள் பொலிஸாரை திடுக்கிட வைத்திருக்கிறது. எட்சன் மொரேரியா என்ற பொலிஸ் உயரதிகாரியே இந்த வழக்கினை கையாள்கிறார். எலிஷாவின் கொலை தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்…
எலிஷா மீது ஆத்திரமடைந்த புறுனோ தனது நண்பர்களான லூயிஸ் ஹென்றிக் ரொமாயோ மற்றும் முன்னாள் பொலிஸ் துப்பறிவாளரான லூயிஸ் அபரேஸிடோ சன்டோஸ் ஆகியோருடன் சேர்ந்து எலிஷாவை கடத்திச் சென்றிருக்கின்றனர். கடத்திச் சென்ற இவர்கள் எலிஷாவை பாழடைந்த பங்களாவில் அடைத்து வைத்திருக்கிறார்கள். எங்களுடைய விசாரணையின் படி எலிஷா ஒரு மாத்தின் முன்பே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இருந்தபோதிலும் மேலதிக விசாரணைகள் முடியாமல் எதனையும் உறுதியாகக் கூறமுடியவில்லை. எலிஷாவின் உடலினையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது உடலினை துண்டுதுண்டாக வெட்டி நாய்களுக்கு வீசியதாகவும் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கின்றன என்றும் குறிப்பிட்டார் பொலிஸ் அதிகாரி.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’