விசுவமடுவில் கிடைத்த முக்கிய ஆவணங்களையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் சிலரைத் தேடி வலைவீசியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசியா, மேற்கு ஐரோப்பா, கனடா மற்றும் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல் ஆயுதக்கடத்தல் நிதி மோசடி போன்றவற்றில் இவர்கள் தொடர்புடையவர்கள் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிவராசா பிருந்தாபன் அல்லது அச்சுதன் அல்லது சுரேஷ், பகிரதன் அல்லது பவி, நரேந்திரன் ரத்தினசபாபதி அல்லது நரேன், கணேஷ்ரூபன் அல்லது ரூபன், பொன்னையா ஆனந்தராஜா அல்லது ஐயா, அல்லது ராஜா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னும் சில செயற்பாட்டாளர்கள் குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்துவருவதற்கு அப்பால் அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்வதா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விசுவமடுவிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச கிளைத்தலைவர் காஸ்ட்ரோவின் அலுவலகத்தில் அண்மையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினாரால் கண்டுபிடிக்கப்பட்ட டயரிகள் மற்றும் குறிப்புகள் மூலம் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பலர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு நிதியளிக்கும் முகவர் நிறுவனங்கள் புலிகளின் கப்பல்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’