வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஜூலை, 2010

லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப அவகாசம்

லெபனான் நாட்டில் சட்ட விரோதமான முறையில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு மூன்று மாத மன்னிப்புக் காலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் எம்.மஹ்ரூப் தெரிவித்தார்.

இந்நிலையில், எவ்விதத் தண்டப் பணமும் செலுத்தாத நிலையில் அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கு அமைய இவர்கள் நாடு திரும்பும் வகையில் இந்த மன்னிப்புக் காலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
விசா அனுமதிக் காலம் முடிவடைதல் உட்பட பல காரணங்கள் காரணமாக லெபனானில் நிர்க்கதியான இலங்கையர்கள் பலர், அந்நாட்டு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் நாடு திரும்ப வேண்டுமாயின், அந்நாட்டு சட்டப்படி 200 அமெரிக்க டொலர்களை தண்டப் பணமாக செலுத்த வேண்டும்.
இருப்பினும் இவ்வாறானதொரு மன்னிப்புக் காலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தொகைப் பணத்தினைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தூதுவர் கூறினார்.
இந்நிலையில், குறித்த சலுகையின் மூலம் நாடு திரும்ப விரும்புபவர்கள் லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குச் சென்று தங்களது ஆவணங்களைக் காண்பிப்பதன் மூலம் நாடு திரும்ப வழிசமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 30 வருட காலத்தில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லெபனானுக்கு பயணமாகியுள்ள நிலையில் அவர்களில் சுமார் 2ஆயிரம் பேர் சட்டவிரோதமான முறையில் அங்கு தங்கியிருப்பதாக தூதுவர் மஹ்ரூப் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’