உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவு ஜனாதிபதி முஹம்மத் நஷீதை இன்று காலை சந்தித்துள்ளார்.
இதன் பின்னர் மாலைதீவு ஜனாதிபதியினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மதியபோசன விருந்தும் வழங்கப்பட்டது.
மாலே சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாலைதீவு உப ஜனாதிபதி முஹம்மத் வாஹித் வரவேற்றார்.
ஜனாதிபதி தமது இந்த விஜயத்தில் மாலைதீவின் முன்னால் ஜனாதிபதி மாமூன் அப்துல் கையூமையூம் சந்தித்தார்.
இந்நிலையில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இச்சந்திப்புக்களில் கலந்துகொண்டார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’