வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

ஐ.நா. சபைக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிரான போராட்டத்துக்கு எதிராக இலங்கையில் இயங்குகின்ற 10 இராஜாங்க செயலகங்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில், கொழும்பில் உள்ள ஜேர்மன், பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சலாந்து, நெதர்லாந்து, ரோமானியா, நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் இராஜதந்திர காரியாலயங்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளன.
அவ்வறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலய வளாகம் முற்றுகை இடப்பட்டுள்ளமையும், அந்த சம்பவத்தில், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் பங்கு கொண்டுள்ளமையும் வருத்தமளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாதானமான முறையில் பேரணிகள் நடத்தப்படுவது, ஜனநாயக நாடு ஒன்றில் மதிக்கப்பட வேண்டிய விடயம் எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயம் முற்றுகையிடப்பட்டதும், அதன் அதிகாரிகளை சமுகமளிக்க முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டதும் கண்டனத்துக்குரிய விடயம் என கூறப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு சர்வதேச ரீதியாக இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயல் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களுக்கும், காரியாலய பிரதேசத்தினதும் பாதுகாப்பு தொடர்பில் இந்த நாடுகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல் விடுத்துள்ளன.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விடயம் குறித்து தமக்கும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி எல் பீரிஸுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக அந்த அறிக்கையில் இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’