இலங்கையின் வடக்கே, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அன்டனி மார்க் என்ற ஊடகவியலாளர் வியாழக்கிழமை இரவு வெள்ளைவானில் வந்ததாகச் சொல்லப்படுகின்ற அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர், மன்னார் தலைமன்னார் வீதியில் உள்ள தமது ஆலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, முகத்தை மறைத்து வெள்ளைத்துணியில் கட்டியிருந்தவர்களே தன்னை வழிமறித்து தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீட்டிலிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்ததாகவும், வீதியில் நல்ல வெளிச்சத்துடன் வாகனம் ஒன்று வந்ததாகவும், இதனையடுத்து தன்னைத் தாக்கியவர்கள் தனது பை ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் அன்டனி மார்க் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள அவர், தற்போது மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
என்ன காரணத்திற்காக, யார் தன்னைத் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’