இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக விளங்கிய சமிந்த வாஸ் அடுத்த உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்காக மீண்டும் விளையாடி அடுத்த உலகக் கிண்ணத்தை வென்றெடுக்க வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் வாஸ் கூறினார்.தான் மிகத் திறமையாக விளையாடி வந்த போதிலும் தனது பந்து வீச்சில் வேகம் போதாது என்று கூறி தான் அணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை முன்னேற்றும் விதத்தில் அரவிந்த டி சில்வா தலைமையிலான தெரிவுக்குழுவினர் நியாயமாக நடந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் சமிந்த வாஸ் பிபிசியிடம் கூறினார்.
மூத்த வீரர்களின் திறமையையும் இலங்கை அணியின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வாஸ் தெரிவித்தார்.
கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்றுவிப்பாளராக பணியாற்ற எண்ணியுள்ளதாகவும் அவர் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
தனக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் ஒருபோதும் ஏற்படாது என்று கூறிய அவர், சனத் ஜயசூரிய அரசியலிலும் கிரிக்கெட்டைப் போலவே சிறப்புடன் ஈடுபடுவார் எனவும் கருத்து வெளியிட்டார்.














சமிந்த வாஸ் செவ்வி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’