வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 18 ஜூலை, 2010

வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி தொடர்பான இணையத்தளம் உருவாகிறது


வடமராட்சி குடத்தனை பகுதி மாணவர்களது கல்வி மேம்பாட்டு வசதி கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அமைக்கப்பட்டுள்ள நியூட்டன் அக்கடமி கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களுக்கான ஊதியத் தொகை இன்றைய தினம் (17) அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மேற்படி கல்வி நிறுவனத்தின் நிர்வாகப் பிரதிநிதிகள் அமைச்சர் அவர்களைச் சந்தித்து வடமராட்சி கிழக்குக் கோட்டத்திற்கு உட்பட்ட மாணவர்களில் புலமைப் பரிசில் திறனாய்வுப் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான உதவுத் தொகை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடியதற்கு இணங்க இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்ததுடன் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் இணையத்தளமொன்றை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டது.

இக்கல்வி நிறுவனத்தில் 178 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன் 19 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’