தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதனைச் நம்பிச் செயற்பட வேண்டாம் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளை குமரன் பத்மநாதன் திசைதிருப்பக் கூடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டு சில மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் அரசாங்கம் ஏன், குமரன் பத்மநாதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் அரசாங்கம் செயற்பட்டால் அது படைவீரர்களின் மனோ திடத்தை சீர் குலைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குமரன் பத்மநாதனை சிறையில் அடைக்க முடியாமை தொடர்பில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரிடம் பெருந்தொகையான சொத்துக்கள் காணப்படுவதாகவும் இதனால் அவருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல இராணுவ பிரிகேடியர்கள் மற்றும் ஜெனரல்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகள் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றமை வெட்கக்கேடான நிலைமை என அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’