டெங்கு நோயினால் களனி பிரதேசத்தில் மரணம் சம்பவிக்குமாயின் உரிய சுகாதார பொறுப்பதிகாரிகளை மரணம் சம்பவித்த வீட்டுவாசலில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன் என நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா சூளுரைத்துள்ளார்.
பிரதேச சபைக் கட்டிடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் களனி பிரதேசத்தில் எவரும் டெங்கு நோயினால் இறக்க நேரிடின் களனி பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார அத்தியட்சகர், கிராம சேவகர், சமுர்த்தி அதிகாரி ஆகியோரை மரணவீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி வைப்பேன்.
இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும். இது குறித்;து நான் பயப்படப் போவதில்லை.
ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் நாட்டின் சகல பகுதிகளையும் சுத்தப்படுத்த வேண்டும். பிரதான வீதிகளில் குப்பைகளை வீசுவோரை தண்டிப்பதற்கு அதிகாரிகள் தயங்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’