கடந்த வருடம் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் அசட்டையாக இருந்ததாக பாகிஸ்தானின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலர் லாகூர் மேல் நீதிமன்றத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இவ்விடயத்தில் அசட்டையாக இருந்தாக 12 இற்கும் அதிகமான பொலிஸாரை அறிக்கையொன்றில் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இப்பொலிஸார் தமது கடமைகளை முறையாக செய்யவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது இலங்கை அணிக்குப் பாதுகாப்பாகச் சென்ற 6 பொலிஸாரும் வான் சாரதியொருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் வலியுறுத்திவருகிறது. எனினும் இதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவதற்கு பாக். கிரிக்கெட் சபை காத்திருக்கிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’