வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

மாலைதீவு அரச-எதிர்க்கட்சி பேச்சுக்கு உதவியளித்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு மாலைதீவு அரசாங்கம் நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி மஹிந்தவின் விஜயத்தின் பின்னர் மாலைதீவில் அரசியல் சர்ச்சைகள் மெதுவாகத் தீர்க்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அந்நாட்டு அரசாங்கத் தூதுக்குழுவொன்று, இப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியளித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டபோதே மாலைதீவு அரசாங்கத் தூதுக்குழுவினர் இவ்வாறு தெரிவித்தனர்.
அதேவேளை, நிலைமை இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேசி அவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக இன்னும் பலவற்றை செய்யவேண்டியுள்ளது என மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அஹ்மட் சஹீட் கூறினார்.
அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக அண்மையில் மாலைதீவு அமைச்சரவை முழுமையாக இராஜினாமாச் செய்தது. எனினும் கடந்த செவ்வாயன்று அமைச்சர்கள் மீண்டும் பதவிறேற்றனர். அவர்கள் முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளை ஜனாதிபதி மீண்டும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சியினர் வழங்கிய உத்தரவாதத்தின் பேரில் நாம் திரும்பிவரவில்லை. மாறாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்காக ஜனாதிபதியும் எதிர்க்கட்சியினரும் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஆக்கபூர்வமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது எனவும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் சஹீட் கூறினார்.
அதேவேளை, எதிர்க்கட்சியினர் தனிப்பட்ட விரோதங்களை ஒதுக்கிவிட்டு பொதுமக்களின் நலன்களுக்காகச் செயற்பட வேண்டும் எனவும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கூறினார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’