பிரிட்டன் மற்றும் பின்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அதிகம் கல்வி கற்றவர்களுக்கு நினைவாற்றல் மங்கி போவது குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இறந்த பின்னர், கல்வி அதிகம் கற்றவர்கள், குறைவாக கற்றவர்கள் என இருவருக்குமே ஒரே அளவு மூளை மழுங்கி போய் இருந்தாலும், உயிரோடு இருக்கும் போது அதிகம் கல்வி கற்றவர்கள் நினைவாற்றல் மங்கி போயுள்ளதற்கான அறிகுறிகளை அதிகம் காண்பிப்பதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது.மிகவும் வயதான 872 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வயதானவர்களிடம் அவர்களின் கல்வி தகுதி குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் கல்வி கற்றவர்கள், நினைவாற்றல் மங்கி போய் இருந்தாலும், அதனை நன்றாக சமாளிக்க கூடிய அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
அத்தோடு கல்விக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ஆண்டும், நினைவாற்றல் மங்கி போவதை 11 சதவீதம் வரையில் குறைப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு கிட்டதட்ட 20 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’