வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஜூலை, 2010

மன்மோகன் சிங்கருணாநிதி கடிதப் பரிவர்த்தனை "மெகா சீரியல்" ஜெயலலிதா கிண்டல்

: இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்குமிடையிலான கடிதப் பரிமாற்றங்கள் மெகாசீரியல் தொடர் நாடகம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமானஜெயலலிதா நேற்று வியாழக்கிழமை சாடியிருக்கிறார்.

ஜூலை 03 ஆம் திகதி இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டுமென பிரதமருக்கு கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார். ஜூலை 09 இல் பிரதமர் கருணாநிதிக்கு பதில் அனுப்பியிருந்தார். இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக கருணாநிதிக்கு அவர் உறுதியளித்திருந்தார்.
பிரதமருக்கு கருணாநிதி கடந்த வாரம் எழுதிய கடிதமானது இலங்கைத் தமிழர்கள் இப்போதும் மோசமான நிலைமையில் இருக்கின்றனர் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதைக் காட்டுகின்றது என்று ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு குறித்து கருணாநிதி தமது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். அத்துடன், புனர்வாழ்வு தொடர்பான களநிலைவரம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு தூதுவரொருவரை அனுப்புமாறு சிபாரிசு செய்திருந்தார். இத்தகைய நிலையில் தி.மு.க.,காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற தூதுக்குழு இலங்கைக்குச் சென்று மேற்கொண்டிருந்த மதிப்பீடுகள் உண்மையற்றவை என்பதை கருணாநிதி இப்போது ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தேர்ந்தெடுத்த உறுப்பினர்களை கருணாநிதி இலங்கைக்கு அனுப்பியிருந்தார். அவரின் மகள் உட்பட உறுப்பினர்கள் இலங்கை சென்றிருந்தனர். அந்தத் தூதுக்குழுவானது தமிழகத் தமிழர்களுக்கும் உலகளாவிய ரீதியிலுள்ள தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்து பொய்யைக் கூறியிருந்தது.
மாநில சட்டசபைத் தேர்தல்களுக்குச் சில மாதங்களே உள்ளன. தோல்வி கிடைக்குமென்ற நிலையில் பல்வேறு திருப்பங்களை உள்ளடக்கிய தனது வசனங்களை அவர் அறிமுகப்படுத்துகின்றார் என்பது நிச்சயமாகும். ஆனால் அதிலொரு உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும். அவர் ஊடாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது கல்லில் எழுதப்பட்ட எழுத்து என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’