வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 ஜூலை, 2010

பொன்சேகாவின் விடுதலைக்காக ஜ.தே.கூ மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு

ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி விரைவில் பொதுமக்களுடன் அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டணி இன்று அறிவித்தது.



அக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க இதனை அறிவித்தார்.
“இராணுவ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு 5 மாதங்களாகியும் விடுதலை செய்யவில்லை. அதனால் அவரை விடுதலை செய்வதற்காகப் போராட்டமொன்று இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும். அதனை யாராலும் தடுக்க முடியாது” என அவர் அங்கு மேலும் தெரிவித்தார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’