வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஜூலை, 2010

இராணுவத் தளபதி சிறப்புரிமைக் குழுவின் முன் விசாரிக்கப்பட வேண்டும்


இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியை பாராளுமன்றிற்கு அழைத்து சிறப்புரிமைக் குழுவின் முன் விசாரிக்க வேண்டுமென ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத் தெரிவுக்குழு கூட்டங்களில் பங்கேற்பதற்கு இராணுவத் தளபதி தடை ஏற்படுத்தியதாகவும், இது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை மீறும் செயலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெரிவுக் குழுக் கூட்டங்களில் பங்கேற்பதற்கு தடை ஏற்படுத்தியமையினால் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் உறுதியளித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’