பூநகரி கிராஞ்சி நாகதேவன்துறை நல்லூர் பரமன்கிராய் பகுதி கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி படகுகளும் வலைகளும் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஞானிமடம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்றைய தினம் (12) நடைபெற்ற இந்நிகழ்வில் முருகேசு சந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் உங்களுடைய தேவைகளுடன் ஒப்பிடும் போது உங்களுக்கு கிடைத்தவை யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றதுதான். ஆனாலும் கிடைப்பவற்றிலிருந்து அதன் உச்சப் பயன்பாட்டின் ஊடாக பொருளாதா மேம்பாடு அடைய முயற்சிக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
வட இலங்கைக்கான மீள் குடியேற்ற உதவித் திட்டத்தின் கீழ் கனேடிய சீடா நிறுவனம் சேவாலங்கா நிறுவனத்தின் ஊடாக வாழ்வாதாரத்திற்கான இவ்வுதவித் திட்டத்தை வழங்கியது.
இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலர் 666 படைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீரியல் துறை பொறுப்பதிகாரி கிராம சேவையாளர்கள் சேவலாங்க உதவித் திட்ட இணைப்பாளர் இன்பராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’