காலிறுதி வரை முன்னேறிய ஜெர்மனி மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் 4-0 கோல்கள் என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போட்டி ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் முல்லர் போட்ட கோலின் மூலம் ஜேர்மனி தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தொடங்கியது.
இதனையடுத்து போட்டியின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்த ஆர்ஜன்டீனா கடுமையாகப் போராடியது.
பின்னர், போட்டியின் 67ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் க்ளோஸ் போட்ட கோலுடன் அந்த முயற்சி இன்னும் கடுமையானது.
பின்னர் போட்டியின் 74ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஃப்ரெய்ட்ரிச் மூன்றாவது கோலைப் போட்டதும் 3-0 கோல்கள் என்ற கணக்கில் ஆர்ஜன்டீனாவின் வெற்றிக்கனவு தகரத்தொடங்கியது.
இறுதியில் க்ளோஸ் மீண்டும் ஒரு கோலைப்போட ஜெர்மனி 4-0 கோல்கள் என்ற கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
கடந்த வாரம் 4க்கு 1 கோல்கள் கணக்கில் இங்கிலாந்தை ஜேர்மன் வெற்றிகொண்டிருந்த நிலையில் முன்னாள் உலக சாம்பியனான ஆர்ஜன்டீனாவுடனான இந்தப் போட்டி மிக விறுவிறுப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஜெர்மனியும் மற்றுமொரு காலிறுதிப்போட்டியான பராகுவே மற்றும் ஸ்பெய்ன் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியும் அடுத்து அரையிறுதிப் போட்டிகளில் மோதிக்கொள்ளவுள்ளன.
அத்தோடு வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற நெதர்லாந்து மற்றும் உருகுவே அணிகளும் அடுத்து அரையிறுதியில் மோதிக்கொள்ளவுள்ளன.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’