அர்ஜென்டினாவின் மோசமான தோல்வியால் மனம் உடைந்துள்ள மாரடோனா, மீண்டும், மது, போதைப் பொருட்கள் பக்கம் திரும்பி விட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை அவரது டாக்டர் மறுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினா காலிறுதி வரை மட்டுமே போக முடிந்தது. காலிறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 0-4 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது.
இந்த மோசமான தோல்வியால் அணி நிலை குலைந்தது என்றால் பயிற்சியாளராக பெரும் நம்பிக்கையுடன் இருந்த மாரடோனாவும் பெரும் சோகத்தில் மூழ்கிப் போனார்.
போட்டித் தொடருக்குப் பின்னர் நாடு திரும்பிய மாரடோனா, மீண்டும் போதைப் பொருட்கள் மற்றும் மதுவின் பக்கம் திரும்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதை அவரது டாக்டர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து மாரடோனாவின் டாக்டரான ஆல்பிரடோ கேச் கூறுகையில், தோல்வியால் மாரடோனா சற்று வருத்தமடைந்துள்ளார் என்பது உண்மையே. ஆனால் அவர் பழைய பாதைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது மீடியாக்களின் கற்பனை.
அவரது உடல் நலனும் நன்றாகவே உள்ளது. சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்றார் டாக்டர் ஆல்பிரட்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’