வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்சிகாவின் மரணம் தொடர்பாக யாழ். போதனா வைத்திய சாலையின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இருவர் ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின்பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2ஆம் திகதிவரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மருத்துவ மாதுவின் சடலம் கொழும்புக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போது சடலத்தின் உட்பகுதியில் உள் உறுப்புகள் எவையும் இருக்கவில்லை என்று கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ஊர்காவற்றுறை நீதிவானுக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் ஆர்.வசந்தசேனன் குறித்த சடலத்தை பிரேத அறையில் வைத்துத் துப்புரவு செய்த பணியாளர்களை விசாரணைக்கு உட்படுத்தினார்.
இதனையடுத்து குறித்த மருத்துவ மாதுவின் சடலத்தினுள் இருந்த உடல் உறுப்புகள் வேறாக எடுக்கப்பட்டு யாழ். கொட்டடியில் உள்ள மயானம் ஒன்றில் நிலத்தினுள் புதைக்கப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த இடத்துக்கு அவர்களுடன் விஜயம் செய்த நீதிவான் அந்த உறுப்புகளை எடுத்து கொழும்புக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, மேற்படி உள் உறுப்புக்கள் மீள தோண்டியெடுக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’