முப்பது வருடகால யுத்தித்தின்; பின்னர் தற்போது வடக்கு,கிழக்கு பகுதிகளில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பாகங்களிலும் கைத்தொழில்.வர்த்தக மற்றும்; உல்லாசப் பயணத் துறை போன்ற பல துறைகளில் அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளதாக கைத்தொழில்,வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் , இலங்கைக்கான புதிய தூதுவர்களுடனான சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் சந்திப்பு இன்று அமைச்சில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
இரு நாடுகளினது வர்த்தகத் துறை, பொருளாதார மேம்பாடுகள் தொடர்பாக முக்கியத்துவமளித்து கலந்துரையாடப்பட்டதுடன், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டங்கள் குறித்தும் உடன்பாடுகள் எட்டப்பட்டது. தனித்தனியாக தூதுவர்களுடன் இடம் பெற்ற சந்திப்பில் ஆர்மோனிய தூதுவர் அரா ஹகோபயான், ப+ருனை தூதுவர் ஹாஜி சிதெக் அலி, அல்கேரியா தூதுவர் எசாரிப் முஹம்மத் ஹசனி, மெசிடோனியா தூதுவர் பீடர் ஜவனோவிஸ்கி ஆகியோர் கலந்துரையாடினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’