வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 17 ஜூலை, 2010

வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம் வீதி புனரமைப்பு

வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம் வீதி புனரமைப்பு திறப்பு விழாவில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் இப்பிரதேசத்திற்கு இந்நிகழ்வு ஒரு பொன்னானதுதான் என்றும் இந்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுவது போன்று ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறி வீதிகளும் புனரமைப்பு செய்வதற்கான வசதிகளை ஒழுங்கமைப்பு செய்வதற்கான வசதிகளை செய்வதாகவும் உறுதிமொழி வழங்கினார். அத்துடன் இப்புனரமைப்புக்காக 2815000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் உரையாற்றும் போது இவ் புனரமைப்பு மேற்கொள்ளப்படுவது மிகவும் கடுமையான நடவடிக்கையாகும். கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களினதும் முயற்சியினால் தான் மேற்கொள்ளப்படுகின்றது என்று கூறினார். அத்துடன் இதனைப் போன்று பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இவர்களால் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இப்பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 250 பாதணிகளும் கால் உறைகளும் வழங்குவதற்காக அந்த பாடசாலைக்குப் பொறுப்பான அதிபரிடம் நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’