இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி விரைவில் வெளியாகவுள்ள மிக அதிக விலை கொண்ட விசேட புத்தகத்தில் அவரது இரத்தம் கலந்த தாள் பயன்படுத்தப்படுகிறது என்று வெளியான செய்திகளை சச்சின் டெண்டுல்கர் மறுத்துள்ளார்.
டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடும் வகையில் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள புத்தகத்தின் சிறப்புப் பிரதிகளில், கையெழுத்துப் பக்கம் டெண்டுல்கரின் இரத்தம் கலந்து உருவாக்கப்படுகிறது என்று புத்தக வெளியீட்டாளர் கூறியதாக பிரிட்டிஷ் செய்தித்தாள் ஒன்றில் செய்திகள் வெளியாகியிருந்தன.ஆனால் இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் சச்சின் டெண்டுல்கர் புத்தகத்தில் தனது இரத்தம் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மை எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் சச்சின் ரமேஷ் டெண்டுல்கரின் வாழ்க்கைச் சரித்தைக் கூறும் புத்தகம் 75 ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்படவுள்ளது.
டெண்டுல்கர் ஒபஸ் என்று பெயரிப்பட்ட இந்த புத்தகத்தின் எடை 37 கிலோ. இது 852 பக்கங்களையும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட புகைப் படங்களையும் கொண்டதாக இருக்கும். பக்கங்களின் நுனிப்பாகங்கள் அனைத்தும் தங்கத்தால் முலாம் பூசப்பட்டிருக்கும்.
அடுத்த பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ள இந்த புத்தகத்துக்கு ஏற்கனவே 10 பேர் முன்பதிவு செய்துவிட்டனர்.
இந்தப் புத்தகத்தில் கிடைக்கும் பணம் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளைக்குப் போகும். தற்போது மும்பையில் ஒரு பள்ளியை அந்த அறக்கட்டளை கட்டிவருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’