வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஜூலை, 2010

கலவரத்தை தூண்டும் பேச்சு : விஜயசாந்தி கைது

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக, நடிகையும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பி.யுமான விஜயசாந்தி இன்று கைது செய்யப்பட்டார்.



ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான கட்சி கூட்டத்தில் நேற்று முன் தினம் பேசிய விஜயசாந்தி, "தனி தெலுங்கானாவுக்கு எதிரானவர்களை வெட்டி சாய்க்க வேண்டும்," என ஆவேசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விஜயசாந்தியின் இந்த பேச்சு ஆந்திராவின் தெலுங்கு தனியார் செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகியுள்ளது.
இதையடுத்து, விஜயசாந்தி மீது பொதுமக்களை கலவரத்துக்கு தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யுமாறு மாநில தேர்தல் அதிகாரி சுப்பா ராவ், காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, விஜயசாந்தி மீது 505 (2), 153 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் பஞ்சரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விஜயசாந்தியின் பேச்சு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், விஜயசாந்தியை ஆந்திர போலீஸார் இன்று கைது செய்தனர். அப்போது, பஞ்ச்ரா ஹில்ஸ் பகுதியில் உள்ள விஜயசாந்தியின் வீட்டின் முன்பு போலீஸுக்கு எதிராக டி.ஆர்.எஸ். கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விஜயசாந்தியை கைது செய்தால் தெலுங்கானா பகுதி முழுவதும் போராட்டத்தில் ஈடுபட தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி முடிவு செய்துள்ளது. இதனால், தெலுங்கானா பகுதி முழுவதுமே பதற்றம் ஏற்பட்டது.
பின்னர், விஜயசாந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’