ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தையான அந்தோனிமுத்து மரியாம்பிள்ளை அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று (27) மாலை நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
அன்னாரின் வீட்டில் இருந்து மாலை 3 மணியளவில் சென் பீற்றஸ் தேவாலயத்திற்கு பூதவுடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசேட ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் ஊர்வலமாகச் சென்று கல்லுண்டாய் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இறுதிநிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் திரு தயானந்தா அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு ராஜ்குமார் ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் உட்படப் பெருமளவிலானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’