வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

விமானத்திலிருந்து குதிக்க முயன்ற பெண்! : கனடாவில் சம்பவம்

விமானத்தின் கதவைத் திறந்து குதிக்க முயன்ற பெண் ஒருவரை விமான ஊழியர்களும், பயணிகளும் தடுத்து நிறுத்திய சம்பவம் ஒன்று நடுவானில் நிகழ்ந்தது.



கனடாவில் உள்ள கால்காரி நகரில் இருந்து ஹாலிபாஸ் என்ற இடத்துக்குச் சென்ற தனியார் விமானம் ஒன்றிலிருந்தே மேற்படி பெண் குதிக்க முயன்றார்.
விமானத்தில் 131 பேர் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் பயணி திடீரென எழுந்தார். விமானத்தின் கதவைத் திறந்து குதிக்க முயன்றார்.
இதை விமான ஊழியர்களும், பயணிகளும் பார்த்து விட்டனர். உடனே பாய்ந்து சென்ற அவர்கள் விமானத்தின் கதவைத் திறக்க விடாமல் அப்பெண்ணைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால், விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே விமானம் வின்னி பெக் என்ற இடத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்பெண் கனடா பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
விமானத்தின் கதவை ஏன் திறக்க முயன்றார் என்பது தெரியவில்லை. அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’