வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஜூலை, 2010

அமெரிக்க இளம் நடிகைக்கு 90 நாள் சிறைத்தண்டனை

அமெரிக்காவின் பிரபல நடிகையும் மொடல் அழகியுமான லின்ட்ஸே லோஹனுக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று 90 நாட் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

போதைப்பொருள் பாவனை வழக்கொன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பை மீறி நடந்தமை காரணமாகவே அவருக்கு கடந்த திங்களன்று இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கொன்றில் கொகெய்ன் போதைப் பொருளை பயன்படுத்தியமை மற்றும் போதையுடன் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளை லின்ட்ஸே லோஹன் ஒப்புக்கொண்டார். அவ்வழக்கில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நிபந்தனை அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.
எனினும் அவர் போதைப்பொருள் பாவனை தொடர்பான வகுப்பொன்றுக்கு சமுகமளிக்க வேண்டும் என பணிக்கப்பட்டார். இந்த உத்தரவை மீறி அவர் வகுப்புக்கு சமுகமளிக்காமை காரணமாகவே கலிபோர்னியா மாநிலத்திலுள்ள நீதிமன்றமொன்று 90 நாள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி அவர் சரணடைந்து சிறைத்தண்டனையை அனுபவிக்க ஆரம்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
24 வயதான லின்ட்ஸே லோஹன் இத்தீர்ப்பை கேட்டு கண்ணீர்விட்டு அழுதார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’