வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஜூலை, 2010

யாழ். குருநகர் 5 மாடி வீடமைப்புத்திட்ட புனரமைப்புத் தொடர்பில் ஆராய்வு!

யாழ். நகர் மத்தியில் அமைந்துள்ள குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5 மாடி வீடமைப்புத் திட்ட புனரமைப்புத் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்ட இவ்வீடமைப்புத்திட்டமானது கடந்தகால யுத்த நிலைமை காரணமாக பெரிதும் சேதமடைந்துள்ளதுள்ளது. இதனை மீளவும் புனரமைத்து கட்டுமான உதவிகளை வழங்குவதாகவும் இவ்வீடமைப்பின் புனரமைப்பு தொடர்பிலான வரைபு மற்றும் மதிப்பீட்டினை தருமாறு யாழ் மாநகர முதல்வரிடம் வட மாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
வீடமைப்புத்திட்ட மனைகள் அனைத்தும் பெரிதும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன் இக் குடியேற்றத்திட்ட மக்கள் 96ம் ஆண்டு இடம்பெயர்ந்ததுடன் ஏறக்குறைய 14 வருடங்களின் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பயனாக மீண்டும் அப்பகுதி மக்கள் மீளக்குடியமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’