மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 16,398 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இந்நிதி மூலம் 1,775 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டங்களில் இதுவரை 6700 மில்லியன் செலவில் 836 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் ஏனைய பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையுமெனவும் அவர் தெரிவித்தார்.
கமநகும, மகநகும மத்திய மாகாண அமைச்சுக்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிதி உதவிகளினூடாக இவ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’