தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 14ஆம் திகதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
"தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது, கொல்லப்படுவது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. நேற்று முன்தினம் அவ்வாறு நடைபெற்ற தாக்குதலில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பவங்களில், தமிழர்களின் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் திராவிடர் கழகம் சார்பில் நாகப்பட்டினத்தில் எதிர்வரும் 14ஆம்திகதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று தனது அறிக்கையில் கி. வீரமணி தெரிவித்துள்ளார். _
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’