வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஜூலை, 2010

12 இலட்சம் குடும்பங்கள் வீடற்ற நிலையில்: சஜித் பிரேமதாச

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் 12 இலட்சம் குடும்பங்கள் சொந்த வீடுகளின்றி வாழ்ந்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதச தெரிவித்தார்.



இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், சுனாமியால் பாதிக்கப்பட்ட 11,000 குடும்பங்கள் ஆறு வருடம் கழிந்துள்ள நிலையிலும் இதுவரை வீடுகளின்றி வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
தன்னுடைய தந்தையான முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உருவாக்கப்பட்ட செவன நிதியத்திற்காக சேகரிக்கப்பட்ட நிதியத்தின் பணத்திற்கு என்ன நடந்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இலங்கை அரசின் பங்களிப்பில்லாமல் வட கிழக்கில் உள்ள மக்களுக்காக 50,000 கட்டி கொடுக்க இந்தியா தீர்மானித்திருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மக்களுக்கு ஒழுங்கான முறையில் வீடமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளாமையினால் இந்நிலைமை ஏற்பட்டமைக்காக அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்திற்கு பின்னரான நிலையில் நாட்டை கட்டியொழுப்புவதற்கு உள்ள, வீட்டு பிரச்சினையில் அரசு தோல்வி கண்டுள்ளது எனவும் சஜித் பிரேமதச குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’