வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 ஜூலை, 2010

போரில் சரணடைந்த 12,000 புலிப் போராளிகளில் 3,028 பேர் விடுவிப்பு; 1,300 பேர் தீவிர உறுப்பினர்

12 ஆயிரம் புலிப் போராளிகள் அரசி டம் சரணடைந்தனர். இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித் தார் அமைச்சர் டியூ குணசேகர.

புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீர மைப்பு அமைச்சில் நேற்றுக்காலை நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
சரணடைந்த புலிப் போராளிகள் சுதந் திரமாக நடமாடித் திரிகின்றனர். புலி முக்கியஸ்தர்கள் கூட கூண்டில் அடைத்து வைக்கப்படவில்லை. பிரபல நடிகை அனோஜா வீரசிங்க இவர்களுக்கு நடனப் பயிற்சியளித்து வருகிறார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார்.
சரணடைந்த புலிப்போராளிகளில் 2,000 பெண்களும் அடங்குவர். இவர்களில் 600 பேருக்குத் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் 364 பேர் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர். கொழும்பில் உள்ள பிரபல ஆசிரியர்கள் இவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துகின்றனர். பரீட்சைக்குப் பின்னர் இம்மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்.
இவ்வாறு அவர் சொன்னார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’