பொலன்னறுவை கல்வி வலயத்தில் உள்ள 119 பாடசாலைகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெறவிருந்த தவணைப்பரீட்சை இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த தினம் பரீட்சைக்கு தயாராக வந்த மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கின்றனர்.
மேற்படி பரீட்சை நடைபெறாமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் இதுகுறித்து தமக்கு அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஆனந்த குலரத்னவை கருத்து தெரிவிக்கையில்,
“வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நேற்று நடைபெறவிருந்த தவணைப் பரீட்சை வேறு ஒரு தினத்திற்கு பிற்போடப்பட்டதாக வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்துவிட்டேன்” என அவர் தெரிவித்தார்.
மேற்படி பரீட்சை பிற்போடப்பட்டமைக்கான காரணம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற எசல பெரஹராவில் இப்பாடசாலை மாணவர்கள் நடன நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமையினால் அம்மாணவர்களின் நலன் கருதி பரீட்சை பிற்போடப்பட்டதாக தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’