வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 ஜூன், 2010

முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங் காலமானார்

பீகார் மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திக்விஜய் சிங் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 55.
இவர், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, வெளியுறவு இணை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் வீரர்களுடன் அண்மையில் லண்டன் சென்றிருந்த திக்விஜய் சிங்குக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையத்து, லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் மூளை நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
திக்விஜய் சிங்குக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். சிகிச்சையின் போது, அவரது மனைவியும், மூத்த மகளும் லண்டனில் இருந்தனர்.
பீகாரில் 1955 ஆம் ஆண்டு நவம்பர் 14-ல் பிறந்த திக்விஜ்ய சிங், நாடாளுமன்றத்தில் ஐந்து முறை எம்.பி. பதவி வகித்தவர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாங்கா தொகுதியில் இருந்து சுயேட்சையாக போட்டியிட்டு எம்.பி. ஆன இவர், இதுவரை 3 முறை மக்களவை எம்.பி.யாகவும், 2 முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டவர்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு நெருக்கமானவராக இருந்த திக்விஜய் சிங், அவரது ஆட்சியின் போது ரயில்வே இணையமைச்சராகவும் இருந்தவர்.
கடந்த மக்களவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தள கட்சி இவருக்கு சீட் தர மறுத்தது. அதையடுத்து, பீகாரின் பாங்கா தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி வாகை சூடினார்.
திக்விஜய் சிங், தேசிய ரைஃபில் சங்கத்தின் தலைவராக இயங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் பொதுச் செயலரும், செய்தித் தொடர்பாளருமான ஷிவானந்த் திவாரி கூறுகையில், "திக் விஜய் சிங் தனது மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் துடிப்பாக இயங்கி வந்தவர். அவரது மறைவு பீகாருக்கு மட்டுமின்றி நாட்டுக்கே பெரிய இழப்பு," என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’