மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளில் ஒத்துழைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா அழுத்தம் தந்துள்ளது.
இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக்கைச் சந்தித்துள்ளார்.கடந்த முப்பது வருடங்களில் இந்திய உள்துறை அமைச்சர் ஒருவர் பாகிஸ்தான் செல்வதென்பது இதுவே முதல் முறை.
2008 நவம்பர் 26 அன்று நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் திட்டியவர்களில் முக்கியமானவர் என்று கருதப்படும் பயங்கரவாதக் கும்பல் தலைவர் ஹாஃபிஸ் சயீத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்ககை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இந்தியாவில் இதுவரை லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இதில் சம்பந்தபட்டிருந்த மற்றவர்களும் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்குடன் தான் வெள்ளியன்று நடத்திய சந்திப்பின் விளைவாக இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கு நல்லதொரு முடிவு ஏற்படும் என்று தான் நம்புவதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் தங்களாலான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்றும் விசாரணைகளுக்கு பாகிஸ்தான் ஒரு நாளும் தடையாக இருக்காது என்றும் அமைச்சர் ரெஹ்மான் மாலிக் உறுதி வழங்கியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’