வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 ஜூன், 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையில் வெற்றியில்லை-பஷீர்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சற்று முன் எமது   இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இது சம்பந்தமாக மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்களை மீளக்கட்டியொழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. அந்த அடிப்படையில் அவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், வெறுமனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசும் பேச்சுவார்த்தையாக இருந்ததே தவிர, இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையாக இருக்கவில்லை.
தற்போதைய சுழ்நிலையில், இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பங்குபற்ற வேண்டும். அவ்வாறு இரு கட்சிகளும் இணைந்து பங்குபற்றுவதன் மூலமே வட கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கும். அவ்வாறில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாயின், முன்னைய பேச்சுவார்த்தைகள் போன்றே பயணிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’