வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 ஜூன், 2010

பூநகரியில் இடம் பெயர்ந்தவர்களுக்கு சொந்தக் காணிகளில் 1230 வீடுகள்

பூநகரியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் சொந்தக் காணிகளில் 1230 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்

நிர்மாணிக்கப்படவுள்ள வீடொன்றுக்குத் தேவையான கூரைத் தகடுகள் உபகரணங்களுடன் தலா 80 ஆயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய 1230 வீடுகளை நிர்மாணிக்கவென 9 கோடி 49 இலட்சம் ரூபா நிதி செலவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு மாத காலத்திற்குள் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அந்த மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்று தெரிவித்த அவர், இதன் மூலம் பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவிலுள்ள 1230 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
பூநகரியில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கம் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்துவதற்குத் தேவையான பணிப்புரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
1230 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அங்கீகாரத்தை அரசாங்கம் மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அங்கீகாரத்திற்கு அமைய யுனொப்க்ஸ் என்ற அரச சார்பற்ற நிறுவனம் 1000 வீடுகள் கரிதாஸ் நிறுவனம் 200 வீடுகள் சோஆ நிறுவனம் 30 வீடுகள் என்ற அடிப்படையில் 1230 வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’