இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கிடையில் ஏற்படுகின்ற தொழில் ரீதியிலான பிரச்சினைகளை இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூகமாக தீர்க்கும் முகமாக இந்தியக் கடற்றொழிலாளர் சமூகத்தைச் சார்ந்த இரண்டு பிரதிநிதிகள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் மேற்படி பிரதிநிதிகள் இருவரையும் அமைச்சர் அவர்கள் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் பிரகாரம் இச்சந்திப்பு கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சில் இடம்பெற்றது.
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையிலான தொழில்ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தமிழகத்தில் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் இதில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களும் இலங்கைக் கடற்றொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
அதே நேரம் இம்மாநாட்டில் இந்திய மத்திய அரசினதும் தமிழக அரசினதும் கடற்றொழில் துறைசார்ந்த அமைச்சர்களும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’