உலக டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்ட நேரம் விளையாடப்பட்ட போட்டி வியாழன் மாலை விம்பிள்டனில் முடிவடைந்தது.
மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்காவின் ஜான் இஸ்நெர் பிரான்ஸின் நிக்கோலா மாஹூவை வென்றார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய  நிலையில் முதல் சுற்றுப் போட்டி ஒன்றிலேயே இந்த இருவருக்கும் இடையேயான இந்த போட்டி  இடம்பெற்றது. 
இந்தப் போட்டி 11 மணி நேரத்துக்கும் அதிகமாக  விளையாடப்பட்டது. போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முடிவு செய்யும்  ஐந்தாவது செட் நீண்டு கொண்டே போனதால் போட்டி மூன்று நாட்களுக்கு இடம்பெற்றது. 
டென்னிஸ் விளையாட்டில் சாதனை படைத்துள்ள இந்தப் போட்டியில்  இறுதியாக ஜான் ஐஸ்னர் 70-68 என்கிற கணக்கில் இறுதி செட்டை வென்று போட்டியின் அடுத்த  சுற்றுக்கு முன்னேறினார். 
மிக நீண்ட நேரம் விளையாடப்பட்ட போட்டி என்பது மட்டுமல்லாமல்,  ஒரு போட்டியில் மிக அதிகமாக விளையாடப்பட்ட ஆட்டம் மற்றும், மிகக் கூடுதலான அளவில்  ஏஸ்கள் சர்வ் செய்யப்பட்ட போட்டி என்ற பெருமையையும் இது பெற்றது. 
பத்து மணி நேரம் விளையாடிய பிறகும் இந்தப் போட்டி முடிவுக்கு  வராத நிலை ஏற்பட்டது. இந்த இருவருக்கும் இடையேயான போட்டியின் இறுதி செட்டில் 59-59  என்கிற புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை போதிய வெளிச்சம் இல்லாத  காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 
![]()  | |
| விம்பிள்டன் மைதானம் | 
விம்பிள்டன் போட்டிகளை பொறுத்த வரை 1969 ஆம் ஆண்டு பான்ச்சோ  கன்சால்வெஸ் மற்றும் சார்லி பஸரேல் ஆகியோரிடையே இடம் பெற்ற போட்டியே நீண்ட நேரம்  ஆடப்பட்ட போட்டியாக இருந்தது.

  













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’