சட்டவிரோத குடியேற்ற வாசிகளாக இலங்கையர்கள் வெளிநாடு செல்வதை தடுப்பதற்கென புலனாய்வுப் பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புலனாய்வுப் பிரிவினர் கடற்பரப்பிலும் நிலப்பகுதியிலும் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரியல் அட்மிரல் தயா தர்மப்பிரிய குறிப்பிட்டார்.
கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்பவர்களை கண்காணிப்பதற்கென தேடுதல்களை விரிவுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கரையோரப் பாதுகாப்புச் செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செலவதற்காக சில நிலையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த வருடத்திற்குள் மேலும் இரண்டு கரையோரப் பாதுகாப்பு நிலையங்கள் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’