வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 26 ஜூன், 2010

தோட்ட மகளிருக்கு மருத்துவ சோதனை : விசாரணை நடத்த அமைச்சர் முடிவு

தோயிலை தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களிடம் அவர்கள் கருவுற்றுள்ளனரா என்பதைக் கண்டறியும் சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்படுவது குறித்து தான் விசாரணை நடத்தவிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க பிபிசிக்குத் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.



ஆனால் இதுவரை இந்தப் பிரச்சினை தன் கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்று, வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் அவர் கூறிய்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
நூவரெலியா மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கும் திருமணமான பெண்களிடம், அவர்கள் கருவுற்றுள்ளார்களா என்பது குறித்து சோதிக்கப்படுவதாக மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் மனித உரிமைகள் ஆணையத்திடம் ஏற்கனவே புகார் கொடுத்துள்ளார்.
முப்பது வயதான சரோஜா தான் தோட்டத்துக்கு சென்று வேலை கேட்ட போது, மருத்துவ சோதனைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டதாகவும், அதில் தான் 5 மாத கால கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால் தனக்கு வேலை அளிக்கப்படவில்லை என்றும் கூறினார். வேலையில்லாததன் காரணமாக தன்னால் போஷாக்கான உணவு வாங்கிச் சாப்பிட முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதுபற்றி பேசிய மற்றுமொரு கர்ப்பிணியான தீபா, தான் வேலை கேட்டுச் சென்ற போது, கர்ப்பமாக இருப்போருக்கு வேலை தரப்படாது என்றும், குழந்தை பிறந்த பிறகு வேலை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் கூறினார்.
இந்தப் பிரச்சினை குறித்து பொலிஸாரிடமும், அமைச்சர்களிடமும் புகார் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சங்கத்தின் தலைவர் துரைசாமி.
இவ்வாறு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’