வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 ஜூன், 2010

தமிழ் நாட்டில் குழந்தைகள் கடத்தல்


தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய அளவில் குழந்தைகள் கடத்தல் இப்போது நடந்து வருவதாக செய்திகள் வந்திருக்கின்றன.
அரசு, மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து, குழந்தைகள் பிறந்தவுடனேயே, மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
குறிப்பாக குழந்தைகள் இல்லாமல் தவிக்கும் வெளிநாட்டினருக்கு இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட கடத்தலில் ஈடுபட்டதாக புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை சிலர் கைதாகியிருக்கின்றனர். இன்னும் பலரை போலீசார் தேடிவருவதாகவும், மதமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு இதில் தொடர்பிருக்கிறதா என்று விசாரித்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.
தத்து கொடுப்பதைக் கண்காணிக்கும் அகில இந்திய குழந்தைகள் நலன் குழுவின் தமிழகப் பிரிவின் தலைவர் டாக்டர் மனோரமா பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.
மதமாற்றம் செய்தல், அநாதைக் குழந்தைகள் இல்லம் நடத்துவதாகக்கூறி வெளிநாடுகளிலிருந்து பணம் பெறுதல், பின்னர் அக்குழந்தைகளை வெளிநாட்டினருக்கு விற்றல் என்பன போன்ற காரணங்களுக்காக கடத்தல் நடைபெறுவதாகவும் டாக்டர் மனோரமா குற்றஞ்சாட்டுகிறார்.
மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு இருந்தும் குழந்தைகள் கடத்தப்படுவதற்கு காரணம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில் மருத்துவமனை நிர்வாகிகளேகூட உடந்தையாக இருக்கின்றனர் என்றும் மனோரமா கூறுகிறார்.
கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் இவ்வாறு கடத்தப்பட்ட 15 குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கிறிஸ்தவ போதகர்கள் இருவரும் அடங்குவதாகவும் அவர் கூறுகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’