வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

சந்தர்ப்பம் கிடைக்கும்போது இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் - பேராசிரியர் சிவத்தம்பி

இலங்கை தமிழர்களின் பாரம்பரிய கலாசாரம் விழுமியம் மற்றும் தாற்பரியம் போன்றவற்றை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என புகழ்பெற்ற கல்விமானான பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற தமிழ்க்;கல்விமானும் யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியருமான காதிகேசு சிவதம்பி தமிழகம் கோயம்பத்தூரில் இடம்பெறும் செம்மொழி மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்ள சென்ற நிலையிலேயே இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். செம்மொழி மாநாட்டு ஏற்பாட்டாளர்களான பல்வேறு துறைகளைச் சேர்ந்த கல்விமான்களால் எழுதப்பட்ட 20 நூல்களை பேராசிரியர் வெளியிட்டு வைத்தார். இதன் போது கருத்துரைத்த பேராசிரியர் சிவதம்பி இந்த மாநாட்டு நிகழ்வுகளில் தாம் கலந்து கொள்வது குறித்து சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறப்பட்ட கூற்றில் எந்தவிதமான உண்மையும் இல்லை என தெரிவி;த்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் மேற்படி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். செம்மொழி மாநாட்டில் பங்குபற்றுவதற்கு தமிழக அரசால் ஏற்கனவே தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதனை இந்திய மத்திய அரசாங்கமும் அங்கீகரித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’