வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 ஜூன், 2010

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோருபவர்களில் 500 மேற்பட்டோர் சிறார்கள்.


இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிறார்கள் அரசியல் அந்தஸ்து கோருபவர்களாக வகைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பல முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
கடந்த 3 வருட காலப்பகுதியினுள் இந்த தொகை 25 மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மைய புள்ளி விபரங்களுக்கு அமைய ஜுன் 11ம் திகதி வரையில் 18 வயதுக்கு குறைந்த 508 சிறார்கள் தனியான முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுடன் ஈராக் மற்றும் ஈரான் நாடுகளை சேர்ந்தவர்களும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி சிறார்கள் வீடுகள் விடுதிகள் உணவகங்கள் அல்லது மாற்று வசதிகள் கொண்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பாடசாலை கல்வியும் வழங்கப்படுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் கூட்டு அரசாங்கம் ஆட்சி செய்த காலப்பகுதியினுள் 21 சிறார்கள் மட்டுமே அந்த வகைப்படுத்தலில் இருந்ததாக எதிர்கட்சி குடிவரவுத்துறையின் பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். ஆனால் புதிய அரசின் நிர்வாகத்தின் கீழ் இந்த தொகை 25 மடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’